Tuesday, 22 November 2016

அளவைகள்

அளவை என்பது இந்த நூலை கற்பதற்கு முன் அறிந்த கொள்ள வேண்டிய சில வரைமுறைகள் 

அளவை காண்டல் கருதல்உரை அபாவம் பொருளொப் பாறென்பர்,
அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான்(கு),
அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவையெல்லாம்,
அளவை காண்டல் கருதல்உரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே. 7

அளவை என்பது பிரமாணம் ஆகும். 

காண்டல் - காணும் (காட்சி) பிரமாணம்
கருதல் -  அனுமானம்
உரை - ஆகமப் பிரமாணம்
அபாவம் - இன்மை (பொறிகளுக்கு அறிய முடியாத)
பொருள் - அருத்தாபத்தி (பொருள் புரிந்து கொளல்)
ஒப்பு - உவமைப் பிரமாணம்




மாசறு காட்சி ஐயந் திரிவின்றி விகற்ப முன்னா
ஆசற அறிவ தாகும் அனுமானம் அவினா பாவம்
பேசுறு மேதுக் கொண்டு மறைபொருள் பெறுவ தாகும்
காசறு முறையிம் மானத் தடங்கிடாப் பொருளைக் காட்டும். 8

கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம் திரியவே,
கொண்டல் திரிவாம் பெயர்ச்சாத்தி குணமே கன்மம் பொருளெனஐந்,
துண்ட விகற்ப உணர்வினுக்குப் பொருளி னுண்மை மாத்திரத்தின்,
விண்ட வில்லா அறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே. 9

காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென,
ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்,
மாண்ட உரைதந்த் ரமந்த்ரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்,
பூண்ட அளவைக் கெதிர் புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே. 10

அன்னிய சாதி யுமதன் சாதியும் அகன்று நிற்றல்
தன்னியல் பன்னி யத்தைத் தவிர்ந்துதன் சாதிக் கொத்தல்
துன்னிய பொதுஇ யற்கை சொனனஇவ் விரண்டி னுள்ளே
மன்னிய பொருள்கள் யாவும் அடங்கிடு மான முற்றால். 11

உயிரினோ டுணர்வு வாயில் ஔ¤யுரு வாதி பற்றிச்
செயிரொடு விகற்ப மின்றித் தெரிவதிந் திரியக் காட்சி
அயர்விலிந் திரிய ஞானம் ஐம்புலன் சார்ந்து யிர்க்கண்
மயர்வற வந்த ஞானம் மானதக் காண்ட லாமே. 12

அருந்தின்பத் துன்பம் உள்ளத் தறிவினுக் கராக மாத்
தரும்தன்வே தனையாங் காட்சி சமாதியான் மலங்கள் வாட்டிப்
பொருந்திய தேச கால இயல்பகல் பொருள்க ளெல்லாம்
இருந்துணர் கின்ற ஞான மியோகநற் காண்ட லாமே. 13

பக்க மூன்றின் மூன்றேது வுடைய பொருளைப் பார்த்துணரத்,
தக்க ஞானந் தன்பொருட்டாம் பிறர்தம் பொருட்டாம் அனுமானம்,
தொக்க இவற்றாற் பிறர்தௌ¤யச் சொல்லலாகும் அச்சொல்லும்,
மிக்க வந்நு வயத்தினொடு வெதிரே கக்சொல் லெனஇரண்டாம். 14

மூன்று பக்கம் பக்கம்நிகர் பக்கம் நிகரில் பக்கமெனத்,
தோன்றும் பக்கந் துணிபொருளுக் கிடமாம் உவமை நிகர் பக்கம்,
ஆன்ற பொருள்சென் றடையாத விடமா நிகரில் பக்கமுதல்,
ஏன்ற இரண்டும் பொருளுண்மைக் கிடமாம் ஒன்று பொருளின்றாம். 15

ஏது மூன்றாம் இயல்புகா ரியத்தோ டநுப லத்தியிவை,
ஓதி னியல்பு மாமரத்தைக் காட்டல் உறுகா ரியம் புகைதன்,
ஆதி யாய அனல்காட்ட லாகும் அநுப லத்தியது,
சீத மின்மை பனியின்மை காட்டல் போலுஞ் செப்பிடிலே. 16

புகையால் அனலுண் டடுக்களைபோ லென்னப் புகறல் அந்நுவயம்,
வகையாம் அனலி லாவிடத்துப் புகையின் றாகும் மலரினொடு,
முகையார் நீரிற் போலென்று மொழிதல் வெதிரே கச்சொல்இவை,
தொகையால் உறுப்பைந் தொடுங் கூடச் சொல்லு வாரு முளர்துணிந்தே. 17

போது நாற்றத் தால்அறிதல் பூர்வக் காட்சி அனுமானம்
ஓது முறையா லறிவின்அள வுணர்தல் கருதல் அனுமானம்
நீதி யான்முற் கன்மபல நிகழ்வ திப்போ திச்செய்தி
ஆதி யாக வரும்பயனென் றறிதல் உரையால் அனுமானம். 18

அநாதியே அமல னாய அறிவன்நூல் ஆக மந்தான்
பின்ஆதிமா றின்றிப் பேணல் தந்திர மந்தி ரங்கள்
மனாதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை யாகும்
தனாதிஈ றிலாதான் தன்மை யுணர்த்துல் உபதே சந்தான். 19

ஈண்டு பக்கப் போலிநான் கேதுப் போலி யொருமூன்றான்,
வேண்டும் எழுமூன் றாகும்விளங் குவமைப் போலி யீரொன்பான்,
காண்டுந் தோல்வித் தானம்இரண் டிருபத் திரண்டாம் கருதிலிவை,
யாண்டு மொழிவர் அவையெல்லாம் அளக்கில் அறுபத் தைந்தாகும்.    20

No comments:

Post a Comment