பாயிரம்
பரசிவ வணக்கம்
அறுவகை சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாம்குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்(கு)
அறிவினில் அருளால் மன்னி அம்மையோ டப்ப னாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்.
நூலின் வழி
என்னைஇப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தேதன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டும்
மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டான்நூல்
சென்னியிற் கொண்டு சைவத்திறத்தினைத் தெரிக்கலுற்றாம்.
நுதலிய பொருளும் , கேட்போர் பயனும்
பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்.
அவையடக்கம்
மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றும்குறைவிலா அளவி னானுங் கூறொனா தாதி நின்ற
இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை
நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே.
இதுவும் அதுவே
அருளினால் ஆக மத்தே அறியலாம் அளவி னாலும்தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே
மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா
இருளெலா மிரிக்க லாகும் அடியரோ டிருக்க லாமே.
No comments:
Post a Comment