Tuesday, 22 November 2016

விநாயகர் வணக்கம்


ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் 
          நால்வாய்ஐங் கரத்தன்ஆறு 
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் 
         தருமொருவா ரணத்தின் தாள்கள் 
உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே 
          இரவுபகல் உணர்வோர் சிந்தைத் 
திருகோட்டும் அயன்திருமால் செல்வமுமொன் 
         றோவென்னச் செய்யும் தேவே.

பதம் பிரிக்கப்பட்டது:

ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன் நால்வாய் ஐந்து கரத்தன் ஆறு 
தருகோட்டம் பிறை இதழி தாழ் சடையான் தரும் ஒரு  வாரணத்தின் 
                 தாள்கள்
உரு(கி) ஒட்டும்   அன்போடு வணங்கி ஒவ்வாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத் [திருகு-]
[-திரு]கோட்டும் அயன் திருமால் செல்வமும் ஒன்றோ என செய்யும் தேவே

பொழிப்பு:

ஒரு கொம்பினை உடையவன், இரு காதுகளை உடையவன்,  தொங்கும் (நாலம்)    வாயினை உடையவன், ஐந்து கைகளை உடையவன்,
ஆறு (கங்கை),  வளைந்த (தருகோட்டம்)  நிலவு (பிறை), கொன்றை மாலை (இதழி) சூடிகொண்டிருக்கும் ,    நீண்ட (தாழ்) சடையுடையவன் நமக்கு தந்தருளிய ஒருவன்,
ஒரு யானைமுகத்தினை உடையவரின்     (வாரணம்) பாதங்களை ....
பேரன்போடு வணங்கி இரவு பகல் பாராது  உணர்வோர் சிந்தைத்    தரும் குற்றத்தை  (திருகு) நீக்கும் (ஓட்டும்). பிரம்மனும் , திருமாலும் கொடுக்கும் செல்வம்  எல்லாம்  ஒரு பொருளா என உணர்த்தும்.


No comments:

Post a Comment